இந்தியா

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எப்போது தேர்தல்.. தேர்தல் ஆணையம் டெல்லியில் நாளை ஆலோசனை..

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக, நாளை, இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால், இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா தலைமையிலான, இந்திய தேர்தல் ஆணையக்‍ குழுவினர், 5 மாநிலங்களுக்கும் நேரில் சென்று, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் நாளை டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. அதன் பின்னர், தேர்தல் தேதிகள் அறிவிக்‍கப்படும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!