சினிமாபொழுதுபோக்கு

அஜித்தின் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது?

நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில், தல அஜித் ’வலிமை’ படத்தில் நடித்துவருகிறார். கரோனா தொற்று காரணமாக தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் படுவேகமாக நடைபெற்றுவருகிறது.

இன்னும் 15 நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் உள்ளதால், ஏப்ரல் 29ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’வலிமை’ படத்தின் எவ்வித தகவல்களும் வெளியாகாமல் உள்ளதால், அடுத்த வாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் வலிமை படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி, திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Back to top button
error: Content is protected !!