தொழில்நுட்பம்

‘வாட்ஸ் அப்’ டூ ‘சிக்னல் மெசஞ்சர்’ – மாறி வரும் பயனர்கள்!

தகவல் தொடர்புக்காக வாட்ஸ் அப் செயலியில் இருந்து சிக்னல் மெசேஞ்சர் செயலிக்கு மாறி வருகிறார்கள் வாட்ஸ் அப் பயனாளர்கள். வாட்ஸ் அப் செயலியில் தற்போது வெளி வந்திருக்கும் புதிய அப்டேட் காரணமாக பயனாளர்கள் தற்போது சிக்னல் மெசேஞ்சர் செயலிக்கு மாறியுள்ளனர்.

சிக்னல் மெசேஞ்சர் செயலி

வாட்ஸ் அப் செயலி உலகில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 2 பில்லியனுக்கு அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்திவருகின்றனர். தற்போது வெளிவந்த வாட்ஸ் அப் அப்டேடில் இந்த செயலியின் பயனாளர்கள் தங்களது சுய விவரங்களை பேஸ்புக் செயலியின் தளத்தில் பதிவிடுமாறு வாட்ஸ் அப் நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

கடந்த 2014 ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கியிருந்தது. எண்டு டூ எண்டு என்ஸ்கிரிப்சன் மூலமாக வாட்ஸ் அப் பிரபலமாகியிருந்தது. இதை தொடர்ந்து சிக்னல் மெசேஞ்சர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த செயலால் வாட்ஸ் அப் பயனாளர்கள் சிக்னல் மெசேஜிங் செயலுக்கு மாறியுள்ளனர். சிக்னல் செயலி வாட்ஸ் அப் செயலியை விட மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த செயலியிலும் ஆடியோ, வீடியோ, கால் மற்றும் குரூப்பிங் மெஸேஜ் ஆகிய வசதிகள் உள்ளன. இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் சிக்னல் செயலிக்கு மாறி வருகின்றனர். தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலோன் மஸ்கும் சிக்னல் செயலியை பயன்படுத்துமாறு கூறியுள்ளார்.

Back to top button
error: Content is protected !!