தொழில்நுட்பம்

தடுப்பூசி ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்..!

வாட்ஸ்அப் செயலியில் புதிதாக ‘அனைவருக்கும் தடுப்பூசி’ (Vaccines for All) ஸ்டிக்கர் பேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் பிரபலமான வாட்ஸ்அப் செயலி, பயனர்களைக் கவர்வதற்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்குவது வழக்கம். இம்முறை, வித்தியாசமாக கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சியைக் கையிலெடுத்துள்ளது.

அதன்படி, தற்போது சாட்டிங்கில் பெரிதளவில் பயன்படுத்தப்பட்டுவரும் ஸ்டிக்கர் அம்சத்தில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்று அழைக்கப்படும் புதிய ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை, தற்போது வாட்ஸ்அப் பயனர்கள் பயன்படுத்த முடியும்.

11322129 vaccine

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் சாத்தியக்கூறுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு, மகிழ்ச்சி, நிவாரணம், நம்பிக்கையைத் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தும்விதமாகவும், கொரோனா களப்பணியாளர்களைப் பாராட்டும்விதமாகவும் இந்தப் புதிய ஸ்டிக்கர்ஸ், உருவாக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த ஸ்டிக்கர்களை உலக சுகாதார அமைப்புடன் இணைந்து வாட்ஸ்அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்களையும், பதிவுசெய்யும் முறை குறித்தும் பயனர்களுக்கு விளக்குவதற்காக கோவிட்-19 அழைப்புதவி அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: