ஆன்மீகம்

வாஸ்து நாளில் அமாவாசை – என்ன செய்ய..?

வாஸ்து பூஜையை முறைப்படி செய்வதற்காக வாஸ்து சாஸ்திரம் ஒதுக்கிக் கொடுத்த நன்னாளே வாஸ்து நாள் எனப்படும். அந்த சமயத்தில் வாஸ்து புருஷர் நித்திரையில் இருந்து எழுவார் என்பதும், அக்கணம் வீடு கட்டுவதற்கு முன்னர் பூமி பூஜை போடுவது போன்றவை மிக விசேஷம் என்றும் கூறப்படுகிறது.

இது ஒவ்வொரு வருடத்திலும், சித்திரை 10-ம் தேதி சூரியன் உதயமான நேரத்திலிருந்து 5 நாழிகைக்குப் பிறகும் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும்), வைகாசி 21- ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும், ஆடி 11- ம்தேதி 2 நாழிகைக்குப் பிறகும், ஆவணி 6 – ம் தேதி 21 நாழிகைக்குப் பிறகும், ஐப்பசி 11- ம் தேதி 2 நாழிகைக்குப் பிறகும், கார்த்திகை 8- ம் தேதி 10 நாழிகைக்குப் பிறகும், தை 12 – ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும், மாசி 22 – ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும் வரும். இதைத் தான் வாஸ்து விழிக்கும் நேரம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் வாஸ்து பூஜையை முடித்து விடுதல் நலம்.

மற்றபடி, அன்றைய தினத்தில் வரும் அமாவாசை, கரிநாள் போன்றவற்றை பற்றி எல்லாம் கவலைப் பட்டுக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்குக் காரணம், பொதுவாக வாஸ்து நாளுக்கும், அமாவாசைக்கும் சம்பந்தம் இல்லை. எனினும் வாஸ்து விழிப்பு நேரம் முடிவதற்குள் நீங்கள் பூஜையை ஆரம்பித்து முடித்து விட வேண்டும்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. திதிகள் – கரிநாள் போன்றவை ஜோதிடத்தையும்… ‘வாஸ்து நாள்’ என்பது ‘வாஸ்து சாஸ்திரத்தின்’ அடிப்படையிலும் அமையப்பட்டது. தயவு செய்து இவ்விரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இரண்டும் வெவ்வேறு டிபார்ட்மெண்ட்.

இதன் அடிப்படையில், ஒன்று ஜோதிடத்தை பின்பற்றுங்கள் அல்லது முழுக்க, முழுக்க வாஸ்து சாஸ்திரத்தை முழுமையாக சார்ந்து விடுங்கள். எனினும், உண்மையில் திதியின் அடிப்படையில் நல்ல நாள், நேரம், முகூர்த்தம் பார்த்து பூமி பூஜை போடுவது என்பது அரிது. அப்படி போட்டால் நிச்சயம் தவறு இல்லை. ஆனால், பெரும்பாலும் வாஸ்து நாளில் தான் பூமி பூஜை போடுவது வழக்கம். அது வாஸ்து விழித்திருக்கும் நேரத்திற்குள் ஆரம்பித்து – முடித்து விட வேண்டும். மற்றபடி அந்த நாளில் குறுக்கிடும் அமாவாசை திதி பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வாழ்வை மேம்படுத்தும் வசதியை தரும் இந்த யோகங்கள்!
Back to top button
error: