ஆரோக்கியம்தமிழ்நாடுமாவட்டம்

அடிக்கடி தொண்டை வறண்டு போகிறதா? இதனை போக்க என்ன செய்யலாம்?

வறண்ட தொண்டை என்பது மோசமான நிலை அல்ல. சில சிறந்த வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றினால் யாருக்கு வேண்டுமானாலும் இது எளிதில் குணமாகிவிடும்.

இந்த சிகிச்சைகள் இதன் தீவிரத்தை குறைப்பதோடு, எந்த ஒரு மருத்துவ ஆலோசனை இல்லாமலும் வறண்ட தொண்டைக்கான அறிகுறிகள் ஏற்படுவதையும் கட்டுப்படுத்தும்.

அந்தவகையில் வறண்ட தொண்டைக்கான சில வீட்டு சிகிச்சைகளை இப்போது பார்க்கலாம்.

தேன் தொண்டைக்கு இதமளிப்பதோடு, இருமலை தூண்டும் காரணிகளையும் போக்கும். சிறந்த பலனைப் பெற அதனை அப்படியே சாப்பிடுவது நல்லது. அப்படி இல்லையென்றால் அதில் எலுமிச்சை ஜூஸை பிழிந்து, தேவைப்படும் போது அதிலிருந்து 1 ஸ்பூன் குடியுங்கள்.

மூலிகை தேநீர் பருகுவது. இந்த தேநீரில் இயற்கையான முறையில் குணப்படுத்தும் என்ஸைம்கள் நிறைந்திருக்கிறது. இது தொண்டை வறட்சியை போக்கும்.

ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் கொஞ்சம் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஜூஸை ஒரு டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும். இந்த பானம் எலக்ட்ரோலைட்ஸ்களை திருப்பி கொடுக்கும். இது போக வறண்ட வாய்க்கு ஈரப்பதத்தையும் அளிக்கும்.

சூப்பும் கூட வாய்க்கு ஈரப்பதத்தை அளித்து, எலக்ட்ரோலைட்ஸ் அளவை சமநிலைப்படுத்தும். வறண்ட தொண்டை என்பது டீ-ஹைட்ரேஷன் அறிகுறியாக இருக்கலாம். அப்படியானால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற சிக்னலை உங்கள் உடல் அடிக்கடி பெறும். அதனால் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த காய்கறி சூப்களை குடிக்க வேண்டும்.

வறட்சியான வானிலை அல்லது ஏ.சி-யில் இருந்து வரும் காற்றை சுவாசிப்பதால் வறண்ட தொண்டை ஏற்படலாம். அதனால் ஆவி பிடிப்பது சிறந்த சிகிச்சையாக செயல்படும்.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (02.05.2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: