ஆன்மீகம்

தும்மினால் நல்லதா கெட்டதா? சகுண சாஸ்திரம் கூறுவது என்ன?

சகுணங்கள் பலவகையாக இருந்தாலும், அதில் இருக்கும் நல்லனவற்றை மட்டும் எடுத்து கொள்வது நல்லது என்று பெரியவர்கள் கூறுவார்கள். சகுன சாஸ்திரத்திலும் அப்படித்தான். அதிலும் தும்மலிலும் சகுனம் உள்ளது என்கிறது சாஸ்திரம்.

அந்த காலம் முதல் இந்த காலம் வரை தும்மும் போது சகுனம் பார்ப்பார்கள்.  தும்மல் பற்றிய சுவாரசிய தகவல்கள் உள்ளன. தும்மினால் யாரோ நினைக்கிறார்கள் என்றும் ,புரை ஏறினால் யாரோ திட்டுவதாகவும் கூறுவோம்.  இதை பற்றி வள்ளுவரும் தன் குறளில் கூறி இருக்கிறார்.

வள்ளுவர் குறளில்,

‘நினைப்பது போன்று நினையார்கொல்

தும்மல் சினைப்பது போன்று கெடும்’. என்று கூறியுள்ளார்.

தனக்கு தும்மல் வருவது போல் உள்ளது ஆனால் வராமல் அடங்கி விடுகிறது. எனவே தன் மனம் கவர்ந்தவர் தன்னை நினைத்து பின் நினைக்காமல் விட்டுவிடுகிறார் போலும்! அதனால் தான் இவ்வாறு நடக்கிறது என்று தலைவி தன் தலைவனை சந்தேகம் கொள்கிறாள்.  இதுவே இக்குறளுக்கான பொருள்.

இவ்வாறாக தொன்று தொட்டு வந்த தும்மல் பலன்கள் இன்றளவும் நம்முடன் பயணம் கொள்வது வியப்பிற்குரியதாக உள்ளது. இதில் பெண்கள் தங்கள் மனதில் ஒரு விஷயத்தை நினைத்து இருக்கும் போது ஆண் தும்மினால் நல்ல சகுனம் என்று அர்த்தம். அதே போல் தான் ஒரு ஆண் தன் மனதில் எந்த விஷயத்தையாவது நினைத்து கொண்டிருக்கும் போது அந்த சமயத்தில் சரியாக பெண் ஒருவள் தும்மினால் நல்லது தான் நடக்கும்.

இதுவே ஆண் தன் மனதில் ஒரு விஷயத்தை நினைத்து இருக்கும் போது இன்னொரு ஆண் தும்மினால் கெட்ட சகுனம் என்று அர்த்தம். அதே போல் ஒரு பெண் தன் மனதில் எந்த விஷயத்தையாவது நினைத்து கொண்டிருக்கும் போது அந்த சமயத்தில் சரியாக இன்னொரு பெண் தும்மினால் அபசகுணமாக பார்க்கப்படுகிறது.

சளி, கபம் பிடித்து தொடர்ச்சியாக தும்மினால் அதற்கு பலன் எல்லாம் ஒன்றும் கிடையாது. அது இயற்கையாக நடக்கும் ஒன்று. அப்படி இல்லாமல் திடீரென தும்புவதற்கு தான் பலன் கூறப்படுகிறது. இப்படி திடீரென தும்மும் போது ஒரு முறை தும்மினால் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்றும், இரண்டு முறை தும்பினால் நல்லது நடக்கப் போகிறது என்றும் அர்த்தம்.

இன்றளவும் திருமணம் போன்ற வைபவங்களில் மேள சத்தமும், நாதஸ்வர சத்தமும் அதிக ஒலியுடன் ஒலிப்பதற்கும், தும்மலுக்கும் கூட சம்மந்தம் உள்ளது. ஆமாம்  தும்மலை அபசகுணமாக நோக்குவதால் நல்ல காரியம் நடக்கும் இடங்களில் அதிக ஒலியுடன் சத்தம் வைக்கப்படுகிறது. அந்த காலங்களில் எல்லாம் மைக் செட் வைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

  இன்றைய ராசிபலன் (20-11-2021)

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: