ஆரோக்கியம்

வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்கும் சீந்தில் இலைப் பற்றி தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்..!

பண்டைய காலத்தில் இருந்தே ஆயுர்வேத மூலிகையான சீந்தில் இலை பல சுகாதார நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சீந்தில் இலை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். இது செரிமான பிரச்சனைகள், வலிகள் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல சுகாதார பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது.

இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மூலிகையாகும். இது ஃப்ரீ- ரேடிக்கல்களுக்கு எதிராக போராட உதவும். இதன் மூலம் நோய்க்கான ஆபத்து குறையும். சீந்தில் இலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மூலிகையாகும்.

21 60b038797be2d

தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைக்கும் ஒரு சிறந்த உணவு இந்த சீந்தில் இலையாகும். இந்த மூலிகையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனுடன் கொடிய கொரோனா வைரஸில் இருந்தும் நம்மை பாதுகாக்கும். ​

சீந்தில் கொடியின் நன்மைகள்

ஆயுர்வேத மூலிகையான சீந்தில் இலை செரிமான பிரச்சனைகள், வலிகள் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இன்சுலின் அளவினை அதிகரிக்க செய்கிறது.

இதில் குறைந்த அளவிலே சர்க்கரை உள்ளதால் டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தற்போதைய வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சமாளிக்க தினசரி உணவில் இந்த சீந்தில் இலையை சேர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி பார்வை சிக்கல்களையும் இந்த சீந்தில் இலை கொண்டு தடுக்கலாம்.

முடக்கு வாத சிகிச்சைக்கு இந்த சீந்தில் இலைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, கல்லீரல் நோயாளிகளுக்கும், காய்ச்சலை குணப்படுத்தவும் இது உதவுகிறது. ஆயுர்வேத மருத்துவர்கள் டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த இலையை பரவலாக பயன்படுத்துகின்றனர்.

சீந்தில் இலையை தினசரி உணவில் எப்படி சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கான சில எளிய வழிமுறைகளைக் காணலாம் வாங்க. ​

பாலுடன் சீந்தில் இலை

ஆயுர்வேத மருத்துவத்தில், அனைத்து வகையான தசை மற்றும் எலும்பு பிரச்சனைகளுக்கு சீந்தில் இலையே பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மூட்டு வலியால் அவதிப்படுபவர் என்றால் தினமும் ஒரு கிளாஸ் பாலுடன் சீந்தில் இலையை சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

21 60b038798a20a

அத்துடன் சிறிது இஞ்சி சேர்த்தால் இதனுடைய சுவை அபாரமாக இருக்கும். ​

வாயில் போட்டு மெல்லுதல்

இதன் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது தான். ஆனால், பிரஷ்ஷான சீந்தில் இலை கிடைத்தால் அதனை அப்படியே வாயில் போட்டு மெல்லலாம்.

21 60b0387997ace

இந்த கொடியை பூத்தொட்டியில் வைத்து நம் வீட்டிலே கூட வளர்க்கலாம். சீந்தில் இலை ஆஸ்துமா நோயாளிகளுக்கு அதன் அறிகுறிகளில் இருந்து உடனடி நிவாரணம் வழங்குகிறது. ​

ஜூஸாக அருந்துகள்

நீங்கள் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உணவை தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு சிறந்தது இந்த சீந்தில் இலை ஜூஸ் தான். சீந்தில் இலையுடன் நெல்லிக்காய், இஞ்சி சிறு துண்டு, சிறிதளவு கருப்பு உப்பு மற்றும் அதனுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

21 60b03879a61571

இதனை வடிகட்டி அருந்தலாம். இந்த ஜூஸ் உங்களை நோய்க் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும். அதுமட்டுமின்றி உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், ஆஸ்துமா அறிகுறிகளைச் சமாளிக்கவும் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: