ஆன்மீகம்

எந்த கிழமையில் என்ன தீப வழிபாடு பலன் கொடுக்கும்?

இந்து மதத்தில் காணாபத்யம், கௌமாரம், சௌரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம் என்று ஆறு பிரிவுகளில் இறைவழிபாடு நடைபெற்று வருகிறது. இதில், யாருக்கு எந்த தெய்வத்தின் மீது விருப்பம் இருக்கிறதோ அந்த கடவுள் வழிபாடு செய்வது வேண்டுதல் நிறைவேற துணை செய்கிறது. இந்நிலையில் வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் எந்தெந்த வடிவங்களில் எத்தனை தீபங்களை ஏற்றி வழிபாடு செய்வது நல்லது என்பது குறித்து காணலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் 108 தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்புடையது. இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணெய் ஊற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு வாய்ப்பு உண்டு.

திங்கட்கிழமை அன்று அன்னபட்சி வடிவத்தில் அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல், வரிசையாக இலுப்ப எண்ணெய்யை கொண்டு 56 தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு இந்த வழிபாடு மனச்சாந்தியைத்தரும்.

செவ்வாய்க் கிழமைகளில், அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் ஊற்றி வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.

புதன்கிழமை அன்று அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் நல்லெண்ணெய் கொண்டு 23 தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்த புத்தி அகலும்.

வியாழக்கிழமைகளில் அரிசி மாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதன் மேல் தேங்காய் எண்ணெய் கொண்டு 57 தீபங்கள் ஏற்றி வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.

வெள்ளிக்கிழமை அன்று சுத்தமான நெய்யால் 60 தீபங்கள் ஏற்றி வழிபடுவது மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் தேவையற்ற செலவுகள் குறையும்.

சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் கொண்டு 80 விளக்குகளை ஏற்றுவது விசேஷமாகும். இதனால், பித்ரு சாபங்கள் நீங்கும்.

இதையும் படிங்க:  இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: