தமிழ்நாடு

ஆணவ கொலையை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன..?

தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை தடுக்க அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு பிரிவை துவக்க வேண்டும் என ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பரிவில் காவல் எஸ்.பி., சமூக நலத்துறை, ஆதிதிராவிட அதிகாரி இருக்க வேண்டும் என கூறியிருந்தது.

ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தும் வகையில் தனிப்பிரிவை துவங்க உத்தரவிடக் கோரி துளிர் அறிக்கட்டளை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆணவ கொலைகளை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினர். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 80-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளன என கூறியுள்ளது. அரசு முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற கொலைகள் நடந்திருக்காது எனவும் தெரிவித்தது.

Back to top button
error: Content is protected !!