பொழுதுபோக்குதமிழ்நாடு

இடி, மின்னலின் போது விமானங்கள் வானில் பறந்தால் என்ன நிகழும்?

பொதுவாகவே விமானம் காற்றில் போது காற்றின் உராய்வினால் ஸ்டேடிக் மின்சாரம் ஏற்படும். விமானத்தில் உள்ள எல்லா பகுதிகளையும் மின்கடத்தியால் இணைத்திருப்பார்கள்.

main qimg f0b9e68e8b88990deb36eef279ea1a02

ஆதலால் விமானம் முழுவதும் ஒரே மின் நிலைசக்தியில் இருக்கும். இதை குறைக்க அங்காங்கே கூர்மையான பொருட்கள் (static dischargers) இருக்கும். அதன் வழியாக மின்சார நிலைசக்தி வெளியே சென்று விடும்.

மேலும் விமானம் தரை இறங்கிய பின்னர் பலவழிகளில் அது முழுவதும் இறங்கி விடும். டயர்களில் இதற்காகவே கார்பன் கலந்து இருப்பார்கள்.

இடி மின்னல் என்பது ஒரே நிகழ்வு தான். ஒரு மேக கூட்டத்தில் இருந்து மற்றோறு மேககூட்டத்திற்கோ அல்லது தரைக்கோ மிகவும் அதிக அளவில் குறுகிய காலத்தில் மின்சாரம் பாய்வது தான். இந்த நிகழ்வே ஒலியாக வெளிப்படுவதை இடி என்றும் ஒளியாக வெளிப்படுவதை மின்னல் என்றும் கூறப்படுகிறது.

அந்த மின்சாரம் விமானத்தில் படும் போது விமானம் முழுவதும் மொத்தமாக மின் நிலைசக்தி பெறும். விமான பாகங்களுக்கு இடையே மின்சாரம் பாயாது. அதனால் தீப்பொறி ஏற்பட வாய்ப்பு இல்லை.

அதிகமான மின்சாரத்தை வெளியேற்றும் போது முன்கூறிய கூர்மையான பொருட்கள் (static dischargers) சிதைந்து விடும்.

main qimg b86fa39dc833b48f5ea377cdcfad9748

விமானப் பொறியாளர் அதைப் பார்த்தவுடன் மிகவும் விரிவான சோதனைகள் செய்ய வேண்டும்.

98 சதவீதம் இடி மின்னல்களால் விமானங்கள் பழுதடைய வாய்ப்பு இல்லை.

Back to top button
error: Content is protected !!