ஆன்மீகம்

நீங்கள் பணத்தை இப்படி கனவில் கண்டால் என்ன அர்த்தம்?

அன்றாட வாழ்க்கையில், காலை முதல் இரவு வரை கடுமையாக வேலைபார்த்து, அக்கடா என்று இரவு படுத்து உறங்கும்போது, வேலைபார்த்த களைப்பின் காரணமாக படுத்ததும் நிம்மதியாக தூங்கிவிடுவர். இதில், அநேகம் பேருக்கு அவர்களது ஆழ்மனதில் பதிந்த சம்பவங்கள் தொடர்பாகவோ அல்லது தானாகவோ கனவுகள் வருவதுண்டு. அத்தகைய கனவுகளில், பணம் தொடர்பாக வரக்கூடிய கனவுகளுக்கு பலவிதமான விளக்கங்கள் உள்ளன. அதில் சிலவற்றை பார்க்கலாம்.

மிகப்பெரிய தொகையை நீங்கள் பெறுவது போல் கனவில் கண்டால், விரைவில் செழிப்பான வாழ்க்கை கிடைக்கும்.

ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்று கனவில் கண்டால், நீங்கள் மற்றவர்கள் மீது வைத்திருக்கும் அக்கரையை குறிக்கும்.

நீங்கள் பணத்தை இழப்பதை போல் கனவில் கண்டால், உங்கள் வாழ்க்கையில் பணப்பிரச்சனை வரப்போவதை அது தெரிவிக்கிறது.

பணத்தை கடன் வாங்குவது போல் கனவில் கண்டால், நீங்கள் அதிக நேரத்தையும், சக்தியையும் வீணாக செலவு செய்வதாக அர்த்தம்.

பணத்தை திருடுவது போல் கனவில் கண்டால், நீங்கள் விரும்புவதைப் பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதை குறிக்கும்.

திருடப்பட்ட பணத்தை பார்ப்பது போல் கனவில் கண்டால், அடுத்தவர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.

அதிக பணம் செலவழிப்பது போல் கனவில் கண்டால் வாங்கக்கூடிய பொருள்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அர்த்தம்.

பணத்தை சேமிப்பது அதாவது மிச்சப்படுத்துவது போல் கனவில் கண்டால், நீங்கள் பாதுகாப்பானவர்கள், பொறுப்புள்ளவர்கள் என்பதை குறிக்கும்.

இதையும் படிங்க:  வாழ்க்கை வசமாக எந்த திசையில் வாஸ்துவை சரி செய்ய வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: