ஆரோக்கியம்

உடல் பருமனாவதற்கு என்ன காரணம்?

பொதுவாக தங்கள் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் அதிகமாக சாப்பிடுவது தான் என்று மக்கள் நினைக்கின்றனர். அதிகமாக சாப்பிடுவது மட்டுமல்ல, அதிகமாக இனிப்பு உட்கொள்வது, துரித உணவு சாப்பிடுவது போன்றவையே நமது உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகின்றன. இந்த பிரச்சனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. முதலில் நாம் சாப்பிடும் உணவுகளை நன்றாக மென்று முழுங்காமல், அவசர அவசரமாக உணவை முழுங்குவதால் ஜீரணத்தன்மை பாதிக்கின்றது. அதனால் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் நம் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் அதிகரிக்கிறது. அதையடுத்து எந்தெந்த காரணங்களால் உடல் பருமானாகிறது என்பதையும், அதனை தவிர்ப்பதற்கான வழிமுறை குறித்தும் காணலாம்.

எதனால் வருகிறது

மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளால் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கிறது.

தூக்கமின்மை காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.

ஒவ்வாமை, நீரிழிவு அல்லது ஹார்மோன் பிரச்சனைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் உடல் எடையை அதிகரிக்கும்.

தைராய்டு சுரப்பி அதிகரிப்பதால் சிலருக்கு உடல் எடை கூடுகிறது.

வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியா குறைவு காரணமாக, செரிமானம் பிரச்சனை ஏற்பட்டு அதிகரிக்கும் கொழுப்பினால், கட்டுப்படுத்த முடியாத அளவு எடை அதிகரிக்கிறது.

பரம்பரை காரணமாகவும் உடல் பருமனாகும்.

அதிக துரித உணவுகளை உட்கொள்வது, குடிப்பழக்கம், குளிர்ந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள் அருந்துவது போன்ற பழக்கத்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும்.

குழந்தைக்கான கட்டுப்பாடு

சில குழந்தைகள் மரபு ரீதியில் பருமனாக இருந்தாலும், உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் சரிசெய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

குழந்தைகளுக்கு துரித உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகளையும், தானியங்களையும் சாப்பிடக் கொடுத்தால் ஆரோக்கியமாக வளர்வார்கள்.

பச்சை, மஞ்சள், சிவப்பு நிற காய்கறிகளும், பழங்களும் உடலுக்கு மிகவும் நல்லது.

உடல் பருமனாக உள்ள குழந்தைகளை எளிய உடற்பயிற்சிகள் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் மாடிப்படிகள் ஏறி இறங்குவதை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் ஓடியாடி விளையாடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்நீருடன் தேன் கலந்து குடிப்பது பருமனை கட்டுப்படுத்தும். அன்னாச்சி பழம் சாப்பிடுவதும் மிக நன்றாகும்.

தீர்வுகள்

வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வர உடல் எடை குறையும்.

பப்பாளிக் காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

ஒரு டீ ஸ்பூன் அல்லது இரண்டு டீ ஸ்பூன் அளவு கொள்ளு எடுத்து இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.

இதையும் படிங்க:  காலையில் ஓமம் கலந்த தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

ஊற வைத்த அவலை சாப்பிட உடல் எடை குறையும்.

நீர் முள்ளியை உலர்த்தி, வெயிலில் வைத்து உப்பு எடுக்க வேண்டும். அந்த உப்பை கரைத்து காலை, மாலை எடுத்துக்கொள்ள உடல் எடை குறையும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.

உடல் எடை குறைய கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: