ஆரோக்கியம்தமிழ்நாடு

நகங்களின் வளர்ச்சியை இயற்கையாக அதிகரிக்க என்ன செய்யலாம்?

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அதே அளவு தேனும், 3 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய்யும் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை லேசாக சூடாக்கி அதனுள் கால் மணி நேரம் நகங்களை முக்கி வைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் நகங்கள் வேகமாக வளரத் தொடங்கும்.

முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கிளறவும். இந்த கலவையில் 10 நிமிடங்கள் நகங்களை முக்கிவைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று முறை செய்து வரலாம்.

காட்டன் பஞ்சுவில் எலுமிச்சை சாறை முக்கி நகங்களுக்குள் சிறிது நேரம் சொருகி வைக்கலாம். சிறிதளவு சூடான ஆலிவ் எண்ணெய்யுடன் அதே அளவு எலுமிச்சை சாறை கலந்து நகங்கள் மீது தடவி கால் மணி நேரம் மசாஜ் செய்து வரலாம்.

பல் துலக்கும் பற்பசையை நகங்கள் மீது தடவி நன்றாக தேய்த்துவிடவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரத்தில் மூன்று முறையாவது செய்து வரலாம். நகங்கள் நன்றாக வளரத் தொடங்கும்.

ஒரு முழு பூண்டுவை தோல் நீக்கி சுத்தம் செய்து, சிறிதாக நறுக்கி அதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்து வாணலியில் 10 நிமிடங்கள் சூடாக்கவும். எண்ணெய்யில் இருந்து புகை வெளிபடக்கூடாது. சிறு தீயில் பூண்டு நன்றாக பொறிந்ததும் இறக்கி, அந்த எண்ணெய்யை இரவில் நகங்களில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம்.

Back to top button
error: Content is protected !!