ஆன்மீகம்

எந்தெந்த திதியில் என்னென்ன செய்யலாம்?

திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் தான் திதி எனப்படுகிறது. அமாவாசை தினத்தன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பௌர்ணமி அன்று இருவரும் நேர், எதிராக இருப்பார்கள். சூரியனிலிருந்து, சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும். அமாவாசை அன்று சேர்ந்து இருக்கும் சூரியனும், சந்திரனும் பிரதமை அன்று பிரிந்து, பின்னர் மீண்டும் சேருவதற்கு 30 நாட்கள் ஆகின்றன. இந்த 30 நாட்களும் 30 திதிகள் ஆகும். அதாவது சந்திரனை மையமாகக்கொண்டு கணிக்கப்படும் காலகணிப்பில் திதிகள் முக்கியத்துவம் பெறுகிறது. திதிகளில் வளர்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.

பிரதமை திதி :

வாஸ்து காரியங்கள் செய்வதற்கு உகுந்த நாளாகும்.

திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும்.

அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம்.

மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம்.

குபேரன் மற்றும் பிரம்மாவை வணங்குவது நல்லது.

துவிதியை திதி :

அரசு சம்பந்தமான காரியங்கள் ஆரம்பிக்கலாம்.

திருமண காரியங்களை செய்யலாம்.

ஆடை, அணிமணிகள் வாங்கி அணியலாம்.

கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டலாம்.

பிரம்ம தேவனை வணங்கி வழிபாடு செய்வது நல்லது.

திருதியை திதி :

குழந்தைக்கு முதன் முதலாக அன்னம் ஊட்டலாம்.

சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம்.

சிற்ப காரியங்களில் ஈடுபடலாம்.

அனைத்து சுப காரியங்களுக்கும் உகந்த திதி ஆகும்.

சிவன் மற்றும் கௌரி அம்மனை வழிபடுவது நல்லது.

சதுர்த்தி திதி :

எதிரிகளை வெல்ல சிறந்த நாளாகும்.

கேது தோஷத்தை நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.

படையெடுப்புக்கு உகந்த நாளாக மன்னர்கள் கருதினர்.

விநாயகர் மற்றும் எமதர்மனை வணங்குவது சிறப்பு.

பஞ்சமி திதி :

சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் கருதப்படுகிறது

நோய்கள் தீர மருந்து உட்கொள்ளலாம்.

அனைத்து சுப காரியங்களை செய்திடலாம்.

நாக தோஷ நிவர்த்திக்கு உகந்த நாள் இது.

நாக தேவதைகள், திரிபுர சுந்தரியை வணங்குவது சிறப்பு.

சஷ்டி திதி :

சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம்.

தங்க ஆபரணங்களை தயாரிக்கலாம்.

வாகனம் வாங்க சிறந்த நாள்.

புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.

முருக பெருமானை வணங்குவது சிறப்பு.

சப்தமி திதி :

பயணம் மேற்கொள்ள, வாகனம் வாங்க உகந்த திதி ஆகும்.

வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம்.

திருமணம் செய்து கொள்ளலாம்.

சங்கீத வாத்தியங்கள் வாங்க, ஆடை, அணிமணிகள் தயாரிக்க சிறந்த திதி.

சூரிய பகவானை வணங்குவது சிறப்பு.

அஷ்டமி திதி :

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

தளவாடம் வாங்கலாம். நடனம் கற்றுக்கொள்ளலாம்.

குழந்தைப் பிறந்தாலும் பாதகமுமில்லை.

இறைவழிபாடுகள் செய்ய சிறந்த நாளாகும்.

பைரவரை வணங்குவது சிறப்பு.

நவமி திதி :

சத்ரு பயம் நீக்கும் திதி.

கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம்.

சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.

காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு செய்யலாம்.

சரஸ்வதி தேவியை வணங்குவது சிறப்பு.

தசமி திதி :

சுப காரியங்களில், மதச் சடங்குகளில் ஈடுபடலாம்.

ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது.

புதிய பயணம் மேற்கொள்ளலாம். வாகனம் பழகலாம்.

கிரகப்பிரவேசம் செய்யலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம்.

வீரபத்திரன் மற்றும் தர்ம ராஜாவை வணங்குவது.

ஏகாதசி திதி :

விரதம் இருக்கலாம்.

திருமணம் போன்ற காரியங்களை செய்யலாம்.

உடல் சிகிச்சை செய்து கொள்ளலாம்.

சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.

பெருமாளை வணங்குவது சிறப்பு.

துவாதசி திதி :

மதச்சடங்குகளில் ஈடுபடலாம்.

தெய்வ காரியங்கள் மேற்கொள்வதற்கு ஏற்ற திதி.

விரதங்களை மேற்கொள்ளலாம்.

மகா விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

திரயோதசி திதி :

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.

பயணம் மேற்கொள்ளலாம்.

புத்தாடை அணியலாம்.

தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.

சிவ பெருமானை வணங்குவது சிறப்பு.

சதுர்த்தசி திதி :

ஆயுதங்களை உருவாக்கலாம்.

மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள்.

முன்னோர்களுக்கு விரதம் மேற்கொள்ளலாம்.

மகா சக்தியான காளியை வழிபாடு செய்வது நல்லது.

பௌர்ணமி திதி :

ஹோமங்கள் நடத்துவதற்கு சிறந்த நாள்.

சிற்ப கலைகளை மேற்கொள்ளலாம்.

மங்கல காரியங்களில் ஈடுபடலாம்.

விரதம் மேற்கொள்ளலாம்.

அன்னை பராசக்தியை வணங்குவது சிறப்பு.

அமாவாசை திதி :

பித்ரு வழிபாடுகளை செய்யலாம்.

தான, தர்ம காரியங்களுக்கு உகந்த நாளாகும்.

இயந்திரம் சம்பந்தமான காரியங்களை தொடங்கலாம்.

திருஷ்டி கழிப்பிற்கு சிறந்த நாள் ஆகும்.

சிவன், சக்தியை வணங்குவது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: