ஆரோக்கியம்தமிழ்நாடு

குழந்தைகளிடம் கைபேசியை கொடுக்லாமா? ஆபத்துகள் என்னென்ன?

குழந்தைகளின் வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் பெரிய அளவில் பாதிக்கின்றன செல்போன்.

பெற்றோர்களின் அறியாமை

சில பெற்றோர்கள் குழந்தைகள் அழத் தொடங்கினாலே கைப்பேசியை கொடுத்து அமைதிப்படுத்த முயலுகின்றனர்.

சில பெற்றோர்களோ ஒருபடிக்கு மேலே போய் தங்கள் குழந்தைகள் கைப்பேசியை பயன்படுத்துவதை பெருமையாக மற்றவர்களிடம் சொல்கின்றனர். இதைப் பெற்றோர்களின் அறியாமை என்றுதானே சொல்லவேண்டும்!

பெற்றோர்கள் கைப்பேசி கதி என்று இருப்பது

குழந்தைகள் எதைப் பார்க்கின்றார்களோ அதையே திருப்பி செய்யும் பழக்கம் கொண்டவர்கள். பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் கைப்பேசியை தடவிக் கொண்டு இருப்பதைக் கவனிக்கும் குழந்தைகள் தாங்களும் அதையே திருப்பி செய்கின்றனர்.

குழந்தைகளுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன? இந்த ஸ்மார்ட் தொலைபேசிகள் எந்தெந்த வகையில் பாதிக்கின்றது என்று பெற்றோர்கள் அறிந்து விழிப்புணர்வு அடைய வேண்டும்.

கண்களை பாதிக்கும்

கை தொலைபேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் நேரடியாகக் குழந்தைகளின் கண்களைத் தாக்குகின்றன.

கண்களில் உள்ள மாக்யுலா பகுதியைச் சிதைக்கிறது. தொடர்ச்சியாகக் குழந்தைகளிடம் கைப்பேசியை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது பார்வைக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுதலைவலியையும் உண்டாக்கும்.

மூளை வளர்ச்சி குறையும்

கைபேசியில்லிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் குழந்தையின் மூளையைத் தாக்கும் தன்மை கொண்டன. இதனால் அவர்களின் மூளையின் வளர்ச்சி சிறப்பாக இருக்காது. அவர்கள் வளர்ந்த பிறகு மந்தமாகவும் வாய்ப்பு உள்ளது. ஞாபகமறதியும் கூடவே தொற்றிக்கொள்ளும்.

நல்ல தகவலை விட கெட்டது அதிகம்

தொலைபேசியில் பல கெட்ட விசயங்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இது மாதிரியான விசயங்களை குழந்தைகள் பார்க்க நேருவது உகந்ததல்ல. இது அவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கும்.

தூக்கம் கெடுகிறது

அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை என்று ஆய்வு கூறுகின்றது. குழந்தைப் பருவத்தில் போதிய அளவு தூக்கம் இருந்தால் மட்டுமே உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தூக்கம் கெடுவதால் பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.

கவனக் குறைவு

கைபேசியில் மூழ்கிப்போன குழந்தைகளுக்கு கவனக்குறைவும் மிகவும் அதிகமாகவே இருக்கும். மற்ற விசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை இருக்காது. ஒரு விசயத்தை இரண்டு மூன்று தடவை சொன்னால் மட்டுமே அவர்களால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.

காரணமில்லாத அழுகை

எதற்கெடுத்தாலும் அடம் பிடித்து அழத் தொடங்குவார்கள். ஒரு பொருள் வேண்டும் என்றால் வேண்டும் என்று பிடிவாதம் அதிகமாகக் பிடிப்பார்கள். இந்த தவறான பழக்கங்களை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

மன அழுத்தம் ஏற்படுகிறது

அதிகமாக படங்களைப் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது போன்ற செயல்களைச் செய்யும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகளுக்குக் காரணமே இல்லாமல் கோபம் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: