ஆரோக்கியம்தமிழ்நாடு

கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன பயன்கள்..

கறிவேப்பிலையில் நிறைந்துள்ள சத்துக்கள்

கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையில் கொழுப்பு சத்து என்பது இல்லவே இல்லை.

கண்களின் ஆரோக்கியம்

கறிவேப்பிலையில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். வைட்டமின் எ குறைபாட்டால் உங்களுக்கு மாலைக்கண் நோய் , கண் உறுத்தல் போன்ற பிரச்சினை ஏற்படும்.

எனவே கண்களின் ஆரோக்கியத்தினை பாதுகாக்க விரும்புவார்கள் தினமும் கறிவேப்பிலையை உண்டு வரவும் நண்பர்களே.

உடல் எடையினை குறைக்க உதவும்

கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. தினமும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களின் உடல் பருமன் கணிசமாக குறையும்.

இரத்த சோகை நோயினை தடுக்கும்

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று இரத்த சோகை நோய் ஆகும். கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

முடி கொட்டுதலை தடுக்கும்

முடியின் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகவும் உதவும். தினமும் கறிவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது. மேலும் உங்களின் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

வலிமையான எலும்புகள்

கறிவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கால்சியம் நிறைந்த உணவுகளில் இருந்து கால்சியம் சத்துக்களை உறிஞ்ச மெக்னீசியம் சத்தானது முக்கிய பங்கினை வகிக்கின்றது. கறிவேப்பிலை உண்ணும்பொழுது உங்களின் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை பெரும்.

செரிமான ஆரோக்கியம்

கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக மிக முக்கியம்.

மேலும் தேவையான அளவு நார்ச்சத்து உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், மலசிக்கல், சர்க்கரை வியாதி போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

ஒளிரும் சருமம்

கறிவேப்பிலையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து உங்கள் முகத்திற்கு பூசி வந்தால் உங்களுக்கு இளமையான மற்றும் ஒளிரும் சருமம் கிடைக்கும்.

முதுமை தோற்றத்தை தடுக்கும்

கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களுக்கு நரை முடி, செல் அழிவு, விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்

நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கினை வகிக்கின்றது.கறிவேப்பிலைக்கு இயற்கையாகவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு. தினம் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது உங்கள் இருதய ஆரோக்கியத்தினை பாதுகாக்க உதவும்.

loading...
Back to top button
error: Content is protected !!