ஆரோக்கியம்தமிழ்நாடு

தினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் பெறும் நன்மைகள் என்ன ?

கொஞ்சம் அதிக புளிப்பு, கொஞ்சமான இனிப்பு, எஞ்சிய துவர்ப்பு, சற்றே கசப்பு சுவை கொண்ட நெல்லிக்கனிக்காய் சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் தவறாமல் இன்றுவரை பயன்படுத்துகிறார்கள்.

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இது உடலுக்கு பலவகையில் நன்மைகள் தரக்கூடியதாக உள்ளது.

அதிலும் நெல்லிக்காயை தினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதனால் உடலுக்கு பல அற்புத நன்மைகள் கிடைக்கின்றது.

அந்தவகையில் தற்போது தினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுவது பொதுவானது தான். இத்தகைய குமட்டலில் இருந்து விடுபட ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மெதுவான மென்று அதன் சாற்றினை விழுங்க, குமட்டல் குணமாகும்.

செரிமான பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், கண்ட மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கினால், செரிமான பிரச்சனைகள் விரைவில் தடுக்கப்படும்.

அளவுக்கு அதிகமாக கார உணவுகளை உட்கொண்டால் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி ஏற்படும். நீங்கள் அம்மாதிரியான பிரச்சனை கொண்டவராயின், உணவு உட்கொண்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொள்ளுங்கள்.

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

உலர்ந்த நெல்லிக்காய் துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள், பாக்டீரியாக்களை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதிலும் தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.

இதையும் படிங்க:  தமிழகத்தில் இன்றைய (ஏப்ரல் 06) கொரோனா பாதிப்பு நிலவரம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: