ஆரோக்கியம்

தயிரை தலைக்கு பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்!

தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், தலைமுடிக்கு ஊட்டத்தை வழங்கி, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. லாக்டோபாகிலஸ் எனப்படும் ஆரோக்கியமான பாக்டீரியாவுடன் பால் நொதித்தல் செயல்முறையால் தயிர் தயாரிக்கப்படுகிறது.

தயிரில் வைட்டமின் பி -2, பி -12, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. செரிமானத்திற்கான சிறந்த புரோபயாடிக் கூறுகளையும், புத்துணர்ச்சி தன்மையையும் தயிர் கொண்டுள்ளது. அதையடுத்து, தயிரை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் பற்றி பார்ப்போம்.

எதற்காக தலையில் தேய்க்க வேண்டும்

பொதுவாக தயிர் தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து கொடுக்க கூடியது.

பொடுகு பிரச்சனையை போக்க கூடியது.

தயிரில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், முடி உதிர்வை தடுக்கிறது.

முடியின் மயிர்க்கால்களுக்கு தயிர் புத்துயிர் அளிக்கிறது.

தலைமுடிக்கு மிகவும் சிறந்த கண்டிஷனராக தயிர் உள்ளது.

தலைமுடிக்கு நல்ல வளர்ச்சி, மிருது தன்மையை தயிர் கொடுக்கிறது.

என்ன நன்மைகள்

தயிருடன் சிறிது தேன் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் அலச தலைமுடி மென்மையாக இருக்கும்.

தயிரை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடியில் வெடிப்புகள் இல்லாமல், முடி நன்கு வலிமையுடன் இருக்கும்.

தயிருடன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து அலசுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தயிருடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்து கலந்து, தலைக்கு தடவ, தலைமுடி உதிர்வது முற்றிலும் குறையும்.

தயிருடன் தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்திப் பூவின் இதழ்களை சேர்த்து பேஸ்ட் செய்து, நன்கு தடவி 1-2 மணி நேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தயிரை தலையில் தடவி, 30 நிமிடம் கழித்து தலைமுடியை அலச தலைமுடி வறட்சியின்றி இருக்கும்.

இதையும் படிங்க:  கொத்தமல்லி இலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: