ஆரோக்கியம்தமிழ்நாடு

பெருங்காயம் சேர்ப்பதால் என்ன நன்மைகள்..?

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம்.

நரம்புக் சம்பந்தமான பிரச்னைகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்தாக விளங்குகிறது. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.

பல் வலி அதிகம் உள்ளவர்கள், பெருங்காயப் பொடியை வாணலியில் போட்டு வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.

உடலில் வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்தும், உடலில் உள்ள நச்சுக்களை, அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், உடலில் பித்தம் அதிகமாகும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை தீரும்.

வாயு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: