தமிழ்நாடு

சசிகலா குறித்து அதிமுக தலைவர்கள் பேசியது என்ன?

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்த மாலையில் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலா விடுதலை குறித்து பலரும் பேசியுள்ளனர்..இதில் சிலர் பேசிய விபரம் தற்போது வெளியாகியுள்ளது..

துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி.. சசிகலா என்பது முடிந்த கதை அதைப்பற்றி யாரும் நினைக்க வேண்டாம். தேர்தல் நேரத்தில் தேவையில்லாமல் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் என நினைக்கிறேன்..

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் …சசிகலா விடுதலையாகி வெளியே வந்தாலும் அவரோடு யாரும் செல்லப் போவதில்லை. டெல்டா மாவட்டங்களில் என்னை எதிரியாக நினைத்து கொண்டிருக்கும் சிலர் வேண்டுமானால் அவர் பக்கம் போகலாம். மற்றபடி யாரும் அங்கே செல்ல வாய்ப்பில்லை…

அமைச்சர் தங்கமணி…..அந்த அம்மா வெளியே வந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சில வழக்குகளும், சட்டரீதியான வாய்ப்புகளும் உள்ளன. அவற்றை கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கும் அவர் விடுதலையாகி அதிமுகவை கவனிக்க சூழ்நிலை இருக்கப்போவதில்லை.. எனவே அவரை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.. .

அமைச்சர் ஜெயக்குமார் ….அமமுகவிலும் சரி, டிடிவி தினகரன் பின்னாலும் சரி தற்போது யாருமில்லை. அதேபோல் சசிகலாவின் பின்னாலும் யாரும் இருக்கப் போவதில்லை..

எடப்பாடி பழனிச்சாமி …சிலர் விடுதலையாகி வருவார்கள். அவர்கள் பின்னே செல்லலாமென நம்மில் சிலருக்கு சபலம் ஏற்படலாம்.. அப்படிப்பட்டவர்களை நம்முடைய மாவட்டச் செயலாளர்கள் அடையாளம் கண்டு கண்காணிக்க வேண்டும்.. இவ்வாறு பலரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது…

Back to top button
error: Content is protected !!