தமிழ்நாடு

தமிழக போலீசாருக்கு வார விடுமுறை..

தமிழக போலீசார் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் இருப்பதனால் எளிதில் நோய்வாய்ப் படுவதோடு, பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கின்றனர். இதில் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு பணிச்சுமை பலமடங்காக அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்குமார் தாஸ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் கமிஷனர்கள் (சென்னை தவிர்த்து), மாவட்ட எஸ்பிக்கள் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவில் போலீஸ் ஸ்டேசன்களில் பணிபுரியும் போலீசாருக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கும்படியும், அதனை கமிஷனர்கள், எஸ்பிக்கள், சரக டிஐஜிகள் கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். இது போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!