ஆன்மீகம்

புத்தி சுத்திகரிப்புக்கு புதன் வழிபாடு!

புதன்கிழமை விரதம், ஞானத்தையும் அமைதியையும் வழங்குவதோடு, அனைத்து மகிழ்ச்சியையும் பெற உதவி செய்வதுடன், புதன் கிழமையானது மனதின் சுத்திகரிப்பு நாளாக விளங்குகின்றது. ஜோதிட ரீதியாக புதன் கிரகமானது புத்தி கூர்மைக்கு வணங்கப்படும் தெய்வமாக திகழ்வதால், புத்தி சுத்திகரிப்புக்கு புதன் கிரகம் உகந்ததாக கருதப்படுகிறது.

இந்த உலகில் மனிதனின் வாழ்வு உணவை நம்பியே இருக்கிறது. எனவே, உணவு சுத்தமாக இருந்தால்தான் உடல், மனம், உள்ளம், புத்தி, அறிவு இந்த ஐந்தும் சுத்தமாக இருக்கும். தற்போது இருக்கும் பரபரப்பு சூழலில் சமைக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிற நிலையில், வாரத்தின் நடுநாளான புதன் கிழமையாவது சுத்தமான உணவை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். அதனால், உடலும் மனமும் உற்சாகத்துடன் இருக்கும். அதையடுத்து புதன் கிழமையன்று என்ன செய்யலாம், எத்தகைய வழிபாடு நடத்தலாம், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

என்ன செய்வது

பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்காததால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே வகுப்புகள் நடத்தப்படுகிறது.

அலுவலகங்கள் திறக்காததால் எல்லோரும் வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பதால் அலைகற்றைகளின் அதிர்வு, கணினியின் கதிர்வீச்சு பாதிப்புகளுடனேயே எந்நேரமும் இருக்கின்றோம்.

அதிலும், குழந்தைகளுக்கு இந்த கதிர்வீச்சு அவர்களின் கண் மற்றும் மனநலத்தை பதிப்பதற்கு அதிக வாய்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வருங்காலத்தில், இந்நோய்கள், மேலும் பெருகும் என்பதால் புதன் கிழமையன்று செய்யும் பூஜைகளே இதன் பாதிப்புகளை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

சுத்திகரிப்பு வழிபாடு

தினந்தோறும் குறைந்தது ஐந்து மணி நேரம் விளக்குகளை ஏற்றி வைத்தல், சாம்பிராணி தூபம், ஊதுபத்திகளை கோயில்களிலும், வீட்டிலும் ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது.

அதன் மூலம் புத்தியை மட்டுமல்லாது, நாம் வசிக்கும் தெரு, நகரம், மாவட்டம், மாநிலம், நாட்டிற்கு மட்டுமல்லாது விண்வெளியையும் சுத்திகரிப்பு செய்ய முடியும்.

உலகில் உள்ள பிற ஜீவராசிகளுக்காகவும் விளக்கேற்றி வழிபாடு செய்வது பெரும் நன்மையை கொடுக்கும்.

வீட்டில் விளக்கு ஏற்றும்போது நமக்காக ஒன்றும், பிற ஜீவராசிகளுக்காக ஒன்றும் என இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடவும்.

வசதி இல்லாதவர்கள், ஒரே விளக்கில் இரண்டு திரிகளைத் தமக்காகவும், மூன்றாவதைப் பிற ஜீவன்களுக்காகவும் ஏற்றிட வேண்டும்.

புதன் கிழமை அனைவரும் குறைந்தது இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடுவது சிறப்பானதாகும்.

புதன் பகவானுக்கு விருப்பமான வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பதுடன், பாசிப்பருப்புப்பொடி கலந்த அன்னத்தால் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பஞ்ச பூத விளக்கு

ஐந்து விளக்குகளை ஏற்றி வழிபடும் பஞ்ச பூத விளக்குப் பூஜையை நிகழ்த்திட, புதன் கிழமை மிகவும் ஏற்றதாகும்.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (21-09-2021)

உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களால் ஆனவை என்பதால், இவற்றை அதாவது, பஞ்ச பூத சக்திகளை சுத்திகரிப்பதற்காக, கோயில்களிலும், வீடுகளிலும் புதன் கிழமை தோறும் ஐந்து விளக்குகளை ஏற்றிப் பூஜித்தல் சிறப்புடையதாகும்.

புதன் கிழமை தோறும் உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஐந்தையும் சுத்திகரிப்பதற்காக, கைகளால் அரைத்துக் காய வைத்த சந்தனத் தூள், அத்தர், புனுகு, ஜவ்வாது, புனுகு ஆகிய ஐந்தையும் கலந்த திரவியப் பொடியைச் சாம்பிராணி தூபத்தில் போட்டு கோயில்களிலும், வீடுகளிலும் தூபம் இட்டு வந்தால் மனக் குழப்பங்கள் நீங்கி, மனம் அமைதி பெறுவதை காணலாம்.

புதன் கிழமையில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது, நரசிம்மர் கோயிலுக்கு சென்று பானகப் பிரசாதம் வழங்கி வழிபடுவது சிறப்பு.

புதன் கிழமையன்று புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது.

நன்மைகள்

புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும்.

திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம்.

குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: