சினிமாபொழுதுபோக்கு

’நாங்கள் இனி உனக்கு அப்பாவாக இருக்கிறோம்’.. அனிதாவுக்கு ஆறுதல் கூறிய ஹவுஸ்மேட்ஸ்..

பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினர்களாக எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் அனிதா உள்ளே வரும் காட்சிகள் உள்ளன.

anitha biggboss13012021m

அனிதா சமீபத்தில் தனது தந்தையை இழந்து சோகத்தில் இருக்கும் நிலையில் அவர் சோகமாக உள்ளே வந்ததும் அவரது தந்தையின் மறைவு குறித்து ஏற்கனவே அறிந்திருந்த ஹவுஸ்மேட்ஸ் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். குறிப்பாக வேல்முருகன் ’நாங்கள் இனி உனக்கு அப்பாவாக இருக்கிறோம்’ என்று ஆறுதல் கூறுகிறார்.

anitha biggboss13012021m2

anitha biggboss13012021m1

அதேபோல் மற்ற போட்டியாளர்களும் ’அப்பாவை நினைத்து கவலைப்பட வேண்டாம், மனதை தைரியப்படுத்தி கொள்’ என்று அனிதாவுக்கு ஆறுதல் கூறும் உருக்கமான காட்சிகள் இந்த புரமோவில் உள்ளன.

anitha biggboss13012021m4

anitha biggboss13012021m5

பின்னர் அனிதா அப்பா குறித்து பேசியது அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் கைதட்டி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இன்றைய அனிதாவின் வருகை ஹவுஸ்மேட்ஸ்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும், அனிதாவுக்கும் இது ஒரு மிகப்பெரிய ஆறுதலாக இருந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றைய புரமோவில் ஒரு காட்சியில் கூட ஆரி மற்றும் பாலாஜி இல்லாதது ஏன் என்று புரியவில்லை. இதனையடுத்து ஆரி ஆர்மியினர் ‘என் தலைவன் ஆரி எங்கடா’ என்று கேள்வி எழுப்புவதையும் பார்க்க முடிகிறது.

Back to top button
error: Content is protected !!