பொழுதுபோக்கு

நீர்ச் சத்துமிக்க சௌ சௌ துவையல்!

நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினை உள்ளவர்கள் சௌசௌவினை சட்னியாக அரைத்துச் சாப்பிட வேண்டும். இப்போது நாம் சௌ சௌ துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சௌ சௌ – 1
பூண்டு – 5 பல்
வெங்காயம் – 1/2
புளி- நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

சௌ சௌவினை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், சௌ சௌ, புளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரண்டையைப் போட்டு நன்கு வதக்கவும்.

அடுத்து மிக்சியில் வதக்கிய கலவையுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்தால் சௌ சௌ துவையல் ரெடி…!!

இதையும் படிங்க:  தவா புலாவ் செய்வது எப்படி..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: