தமிழ்நாடுமாவட்டம்

2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை!

ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், சென்னையில் நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும் இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain 1

இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழையும், மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட வானிலை மையம், ஏனைய வட கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

rain tn

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, வரும் 27ஆம் தேதி சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், வரும் 28ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

rain fisher warning

இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் வரும் 28ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் செப்.,15ல் திறப்பு – அரசு அறிவிப்பில் தகவல்!!
Back to top button
error: