ஆரோக்கியம்தமிழ்நாடு

எச்சரிக்கை! சுரைக்காய் ஜூஸை அதிகமாகப் பருகினால் மரணமும் நிகழலாம்..

இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில் கொரோனா நெருக்கடியால், அன்றாடம் பல மணிநேரம், லாப்-டாப் அல்லது கனிணி முன்பே அமர வேண்டிய சூழ்நிலைக்கு பெரும்பாலானோர் தள்ளப்பட்டுள்ளனர்.

விளைவு உடல்பருமன் (Obesity). உடல் பருமனைக் குறைத்து ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக நம்மில் பலரும் சுரைக்காயைத் தவறாமல் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.

சுரைக்காய் பழச்சாற்றில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது மற்றும் வயிற்றுப் போக்கை தணிக்கவும் உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சுரைக்காய் பழச்சாறு உடலில் ஏற்படும் வலி மற்றும் அழற்சியை தணிக்கும்.

அறிவியல் ஆராய்ச்சியின் படி, இன்சோம்னியா (insomnia) மற்றும் வலிப்பு நோய்க்கான (epilepsy) சிகிச்சையில் சுரைக்காய் பழச்சாறு சிறந்த மருந்தாக உள்ளது. சுரைக்காய் சாறு இதயநாள நோய் சிகிச்சைக்கும் பயன்படுகிறது.

சுரைக்காய் வைட்டமின் B,Cயைக் கொண்டுள்ளது. நீர்சத்து 96.07%, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5%, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டது.

சுரைக்காயின் மருத்துவப் பயன்கள் 

* சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம்.

* சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

* அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம்.

* கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.

* கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.

* உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

* நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

* வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

* மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும்.

* சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும்.காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.

* சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும்.

* சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.

* தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது சிறந்தது.

* சுரைக்காய் ஜூஸ்யில், நமது உடலுக்கு நன்மை பயக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது.

* ஆயினும், இதை பச்சையாக குடிப்பது உயிரிழப்பை கூட ஏற்படுத்தும். அது மட்டுமின்றி வாந்தி, வயிற்றுப்போக்கு, மற்றும் இரைப்பை இரத்தக்கசிவு போன்ற தீவிரமான அறிகுறிகளுக்கும் வழிவகுக்கும்.

* ஆதலால், நீங்கள் சமைத்த சுரைக்காய் ஜூஸ் மட்டும் தான் உண்ணுகிறோமா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* ஒரு நாளைக்கு 50 மிலி சாறு குறைவாக உட்கொள்ளுதல் போதுமானது.

* அதிகப்படியான சுரைக்காய் ஜூஸ் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, உயிரிழப்பு ஏற்பட செய்யும்.

* சுரைக்காய், கசப்பு சுவை மற்றும் நச்சுத்தன்மையை காரணமாக கொண்ட டெட்ராசைக்ளிக் ட்ரைடெரினாய்டு இணைந்த சேர்மங்கள் ஆகும்.

* கசப்பான சுரைக்காய் ஜூஸ் குடித்த ஒரு மணி நேரத்திற்குள், பெரும்பாலானவர்க்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்த அழுத்தம், மற்றும் மேல் இரைப்பை இரத்த கசிவு போன்ற நோய்களை அனுபவிக்கலாம்.

* சுரைக்காய் ஜூஸ் உட்கொண்ட பிறகு இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடவும். 50 மிலி சாறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும், 200 மிலி உட்கொண்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

Back to top button
error: Content is protected !!