ஆரோக்கியம்தமிழ்நாடு

முறையற்ற மாதவிடாய் பிரச்சினையை எளிதில் தீரக்க வேண்டுமா?

இன்றைக்கு பல பெண்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

இதற்கு மன அழுத்தம், ஹார்மோன் பிரச்சினைகள் போன்றவை மாதவிடாய் ஒழுங்குமுறையை பாதிக்கும் பல்வேறு காரணங்கள் ஆகும்.

மாதம் மாதம் தவறாமல் மாதவிடாய் நிகழாளது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை பெண்களுக்கு ஏற்படுத்தும். எனவே, ஒவ்வொரு மாதமும் எப்பொழுது மாதவிடாய் நடக்கிறது என்பதை பெண்கள் சரியாக கண்காணிக்க வேண்டும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களை சரிசெய்ய ஐந்து எளிய ஆயுர்வேத வீட்டு வைத்தியம் முறைகள் உள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

இலவங்கப்பட்டை பெண்களில் மாதவிடாய் பிரச்சனைகளை முறைப்படுத்தி, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது.

மாதவிடாய் தேதிக்கு ஏழு நாட்களுக்கு முன்னர் இந்த இஞ்சியை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இது மாதவிடாய் காலங்களில் இழக்கும் இரத்தத்தின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

அன்னாசிப்பழம் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களில் பயன்படும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். அன்னாசிப்பழத்தில் புரோமேலின் என்ற நொதி நிறைந்துள்ளது. இது கருப்பையின் புறணி பகுதியை மென்மையாக்கி, மாதவிடாய் காலங்களை சீராக்க உதவுகிறது.

ஆப்பிள் சிடர் வினிகர் குடிப்பது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்கும், சினைப்பை நோய்க்குறி பிரச்சனையும் சரி செய்யவும் உதவுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரை நீர்த்த பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.

சீரகம் கருப்பை தசைகள் சுருங்கி விரிய செய்து ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களை சரிசெய்ய உதவுகிறது.

இதிலுள்ள நன்மைகளை பெற தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்த சீரகத்தை சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: