தமிழ்நாடு

வாக்காளர் அட்டையில் பெயரை சேர்க்க, முகவரி மாற்ற செய்ய வேண்டுமா? – எளிய வழிமுறைகள்..!

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, ஒவ்வொரு மாநில தேர்தல் ஆணையமும், ‘வாக்காளர் பட்டியல்களை’, இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த வாரம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தால், பெயர் நீக்குதல் மற்றும் திருத்தும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது.

பெயர் சேர்த்தால் மற்றும் நீக்குதல்:

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1ஆம் தேதி அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் சிறப்பு முகம் நடைபெறுகிறது. அந்ததந்த நாட்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். மேலும் www.electronics.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 21 இன்று முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் அணைத்து படிவங்களும் இருக்கும். எனவே மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

download 3 5

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் – 6 ஐ பயன்படுத்தவேண்டும். படிவம்- 6 உடன் 2 வண்ணப் புகைப்படம் இணைக்கவேண்டும். பிறப்பு சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும் மற்றும் விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்கப்படவேண்டும். மேலும் வேறு வாக்காள பகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், அல்லது தவறுதலான பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும். இதற்காக, படிவம்-7 – ஐ பயன்படுத்தவேண்டும்.

பெயர் திருத்துவதற்கு மற்றும் இடமாற்றம் செய்வதற்கு:

உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்கலாம். தவறான பதிவின் திருத்தத்திற்க்கு படிவம்-8 –ஐ பயன்படுத்துங்கள். அடையாளச் சான்றாக பிறப்பு சான்றிதழின் நகலை சமர்பிக்க வேண்டும். மேலும் வேறு வாக்காள பகுதிக்கு உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும். விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்கப்படவேண்டும். இதைத்தொடர்ந்து வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். மாநகராட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகங்களில் இந்த அலுவலகம் செயல்படுகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!