ஆன்மீகம்

மகாலட்சுமி அருளோடு செல்வம் பெருக வேண்டுமா?

இன்றைய கால கட்டத்தில் அதிகரித்து வரும் விலைவாசி, சமசீரற்ற பொருளாதார நிலையால் தங்கு தடையில்லா பண வரவு இருக்க வேண்டும் என்ற பலரும் விரும்புகின்றனர். அவற்றை எளிதில் பெற்றிட மகாலட்சுமியின் பூரண அருளை பெற வேண்டும். அவற்றை வழங்கும் மந்திரம் இதோ,

மகாலட்சுமி துதி

நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம: 

நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம: 

த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா 

 பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ 

 பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி 

அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா 

 ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா

நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி 

 ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி 

 ரமா ரக்ஷ்கரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா! 

திருமகளான மகாலட்சுமியை போற்றும் துதி இது.

பாடும் முறை

இந்த துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை கூறி துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு தீபம் ஏற்றி, இத்துதியை தேவியை மனதில் நினைத்து 27 முறை கூறி துதித்து வந்தால் உங்கள் தொழில், வியாபாரங்களில் தங்கு தடையற்ற பணவரவு அதிகரிக்கும். பொன் ஆபரணங்கள் சேரும். அத்துடன் வீட்டில் பொருளாதார கஷ்ட நிலை நீங்கி, செல்வ வளம் பெருகும்.

இதையும் படிங்க:  நல்ல காரியம் செய்வதற்கு, புதன்கிழமைதான் சிறந்ததா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: