தமிழ்நாடு

மாதம் ரூ.12,000 வேண்டுமா? இதோ எல்.ஐ.சியில் சூப்பர் திட்டம்!

அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் பல பென்சன் மற்றும் காட்பீட்டு திட்டங்கள் உள்ளது. இவற்றில் எல்ஐசி அறிமுகப்படுத்திய சரல் பென்சன் (Saral Pension) திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எல்ஐசி சரல் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு 40 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 80. இதில் இரண்டு வகையான annuity திட்டங்கள் உள்ளது. முதலீட்டாளர் தன் விருப்பத் திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் செலுத்தினால் போதும், அதன்பின் ஆண்டுச் சந்தா செலுத்த வேண்டும். ஆண்டு வாரியாக, அரையாண்டு வாரியாக, காலாண்டு வாரியாக, மாத வாரியாகவும் சந்தா செலுத்தலாம்.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அரையாண்டுக்கு 6000 ரூபாயாகவும், காலாண்டுக்கு 3000 ரூபாயாகவும், மாதத்துக்கு 1000 ரூபாயாகவும் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் மாதம் 12,000 ரூபாய் வரை பென்சன் பெற முடியும்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அருகில் உள்ள எல்ஐசி ஏஜெண்டை தொடர்புகொண்டு சரல் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யலாம் அல்லது www.licindia.in இணையதளத்தில் ஆன்லைனிலேயே முதலீடு செய்யலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  6 முதல் 8ம் வகுப்பு வரை அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!!
Back to top button
error: