இந்தியாஆன்மீகம்

விஷு பண்டிகையையொட்டி சபரிமலையில் நாளை நடை திறப்பு..!

கேரளாவில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை திறக்‍கப்படுகிறது.

பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14-ம் தேதி திறக்கப்பட்டு கடந்த 28-ம் தேதி அடைக்‍கப்பட்டது.

இந்நிலையில், விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை மாலை 5 மணிக்‍கு திறக்‍கப்படுகிறது. வரும் 14-ம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் கனி காணுதல் நடைபெறும். தொடர்ந்து 18-ம் தேதி வரை சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இந்நிலையில், நாளை மறுதினம் முதல் 18-ம் தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சபரிமலை வெர்சுவல் க்யூவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: