இந்தியா

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு? விரைவில் DA அதிகரிப்பு!!

கடந்த ஜூன் மாத தவணையுடன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை திரும்ப அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக சம்பள உயர்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பேரலைக்கு மத்தியில் கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் DR தொகை கடந்த ஜூன் மாத தவணையுடன் மீட்டெடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதே போல மாநில அரசு ஊழியர்களுக்கும் DA தொகை திரும்ப கொடுக்கப்படும் என உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், அசாம், ஜார்க்கண்ட், ஹரியானா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான DA மற்றும் DR ஆகியவை மீண்டுமாக உயர்வு பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது கடந்த முறை DA தொகை உயர்த்தப்பட்டவுடன், மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) 24 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயரும் என அறிவிக்கப்பட்டது. இந்த அனைத்து உயர்வுகளுக்கும் மேலதிகமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் DR தொகை கூடுதலாக 3 சதவிகிதம் அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த 3% உயர்வு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மொத்தமாக 31% DA அதிகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என ஊழியர் சங்கங்கள் எதிர்பார்த்துள்ளன. அந்த வகையில் ஜூன் மாதத்தில் 1.1 புள்ளிகள் அதிகரித்தால், DA விகிதத்தில் 31% செலுத்தப்பட வேண்டும் என்று AICPI தரவு தெரிவிக்கிறது. இதையடுத்து செப்டம்பரில் புதிய DA உயர்வு அறிவிக்கப்பட்டால், வரும் அக்டோபர் மாத சம்பளத்துடன் இந்த உயர்வு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் DA விகிதம் 3 சதவிகிம் என கணக்கிடப்பட்டால், அவர்களின் அடிப்படை சம்பளம் 31 சதவிகிதமாக இருக்கும். உதாரணமாக, அடிப்படை ஊதியம் மாதத்திற்கு ரூ. 20,000 என்றால், அடிப்படை சம்பளத்தின் 3% உயர்வு ரூ.600 ஆக இருக்கும். எனவே, ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்துடன் கூடுதலாக ரூ.600 பெறுவார்கள். மேலும், 31 சதவிகித உயர்வை கருத்தில் கொண்டால், சம்பளம் கூடுதலாக பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியம் ரூ.6,200 கூடுதலாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கோவா மாநிலத்தில் ஆகஸ்ட் 30 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு, திரையரங்குகளுக்கு அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!
Back to top button
error: