தமிழ்நாடு

‘சாதி, மதம் பார்க்காமல் சாதனையாளர்களுக்கு வாக்களியுங்கள்’ – கமல்ஹாசன்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் நேற்று (ஜன.12), கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை வழியாக, பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டி, தேர்முட்டி, திருவள்ளுவர் திடல்,காந்தி சிலை ஆகியப் பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது,”சட்டப்பேரவைத் தேர்தலில் சாதி, மதம் பார்க்காமல் வாக்களியுங்கள். பாலியல் குற்றங்களுக்கு இடம் தரக் கூடாது. இந்த மண்ணில் பாலியல் சம்பவம் நடந்து 600 நாட்களாகியும் நீதி கிடைத்தபாடில்லை. கொள்ளையடிக்கும் கும்பலுக்கு வாய்ப்புகள் தரக்கூடாது. தேர்தலில் நீங்கள் விதையைத் தூவினால் நாளைய அரசியல் மாற்றம் உண்டாகும். இனியும், காலம் தாழ்த்தாமல் நல்லவர்களுக்கு வழியை விட வேண்டும்” என்றார்.

பரப்புரையின் போது அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன், மாவட்டத் தலைவர் மயூரா சுப்பிரமணியம் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Back to top button
error: Content is protected !!