சினிமா

தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்?

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

இந்நிலையில், கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இதில், நடிகர் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனுஷுக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: