ஆரோக்கியம்

இந்த உணவுகளை இப்படி மட்டும் சாப்பிடாதீங்க! மீறினால் புற்றுநோய் கூட வருமாம்!!

தற்போதைய அவசர உலகில் நேரம் கிடைக்கும் போது சற்று அதிகமாக சமைத்து வைத்து விட்டு, தேவையான போது சூடேற்றி சாப்பிடுகிறோம். ஆனால் ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை சாப்பிடும் போது சூடேற்றி சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா?

குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை சமைத்தப் பின், மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால், அந்த உணவுகளில் உள்ள சத்துக்கள் நீங்கி, அந்த உணவு நஞ்சாக மாறிவிடும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சில சமயங்களில், பலமுறை சூடேற்றி சாப்பிடும் உணவுகளால் புற்றுநோய் அபாயமும் உள்ளது

செலரி

செலரியில் நைட்ரேட் அதிகளவு உள்ளது. இதனை ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றினால், அந்த நைட்ரேட் நைட்ரைட்டுகளாக மாறி நஞ்சாகிவிடும். பெரும்பாலும் செலரி சூப்புகளில் தான் சேர்க்கப்படும். அப்படி சூப் தயாரிக்கும் போது அதில் செலரி சேர்த்திருந்தால், அதை உடனே குடியுங்கள். ஒருவேளை குடிக்க முடியாவிட்டால், மீண்டும் சூடேற்றுவதற்கு முன்பு சூப்பில் இருந்து செலரியை நீக்கிவிட்டு, சூடேற்றி குடியுங்கள்.

காளான்

காளானை சமைத்தால், சமைத்த அப்பொழுதே சாப்பிடுங்கள். காளானில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. இதை மீண்டும் மீண்டும் சூடேற்றும் போது, அதில் உள்ள புரோட்டீன்கள் உடைக்கப்படும். இதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும் மற்றும் காளானை மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது, அது உடலில் டாக்ஸின்களை உற்பத்தி செய்யும்.

முள்ளங்கி

முள்ளங்கியில் நைட்ரேட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை ஒருமுறைக்கு பலமுறை சூடேற்றும் போது, அது நஞ்சாகி, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். முக்கியமாக நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறி, உடலினுள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டிவிடும். எனவே முள்ளங்கியை ஒருமுறை சமைத்த பின் சூடேற்றாதீர்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்தும் கெமிக்கல்கள் இருக்கும். இந்த இறைச்சியை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இதில் உள்ள கெமிக்கல்கள் சூடேற்றும் போது, உடலினுள் எதிர் விளைவுகளை உண்டாக்கி, சில சமயங்களில் கொடிய புற்றுநோய் தாக்கத்தை கூட ஏற்படுத்தலாம்.

முட்டை

முட்டையில் வளமான அளவில் புரோட்டீன்கள் உள்ளது. எப்போதும் வேக வைத்த முட்டையை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள். இது உடல் ஆரோக்கியத்தை மிகவும் மோசமானதாக்கும். வேக வைத்த முட்டையை உடனே சாப்பிடுங்கள். ஆனால் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள், வேண்டுமெனில் குளிர்ந்த நிலையில் கூட சாப்பிடுங்கள். ஏனெனில் பொதுவாக புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளில் நைட்ரஜென் அதிகளவில் இருக்கும். சூடேற்றும் போது, அது ஆக்ஸிஜனேற்றமடையும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:  உங்களுக்கு சர்க்கரை நோய் வரவே கூடாதா! அப்போ தினமும் இந்த ஜூஸ்களை குடிங்க..!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: