தமிழ்நாடுமாவட்டம்

எனக்கு ஒரு வாய்ப்பு தாங்க.. விம்மி விம்மி அழுத திமுக வேட்பாளர்..!

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என கண்ணீர் விட்டு கதறி அழுதது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கடந்த ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவிய தென்னலூர் பழனியப்பன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் தென்னலூர் பழனியப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என கண்ணீர் விட்டு கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவர் கண்ணீர் விட்டு விம்மி விம்மி அழுதது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க:  தமிழகத்தில் இன்று 6618 பேருக்கு கொரோனா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: