சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் விஜய் டிவி பிரபலம் – ரசிகர்கள் குஷி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான தேன்மொழி சீரியல் நடிகர் தற்போது வெள்ளித்திரையில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
விஜய் டிவி பிரபலம்
சின்னத்திரையில் தோன்றும் ஒவ்வொரு பிரபலங்களுக்கும் உள்ள ஒரே ஆசை எப்படியாவது வெள்ளித்திரையில் நடிக்கவேண்டும் என்பதுதான். விஜய் டிவியின் பிரபலமான சின்னத்திரை நடிகர்கள் எத்தனையோ பேர் வெள்ளித்திரையில் தடம் பதித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சின்னத்திரையில் நடித்து குறிப்பாக விஜய் டிவியில் நடித்து வந்த நடிகர்கள் பலரும் வெள்ளித்திரையில் தடம் பதித்து வெற்றிகரமாக கொடிகட்டி பறக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. நடிகர் சந்தானம் முதல் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் மகாபா ஆனந்த், ரக்சன், ரியோ மற்றும் திவ்யதர்ஷினி ஆகிய நட்சத்திர தொகுப்பாளர்கள் வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் “தேன்மொழி”. அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் சித்தார்த் தற்போது வெள்ளித்திரையில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்பு சீக்கிரத்தில் வெளியாகும் என நடிகர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.