சினிமாபொழுதுபோக்கு

மகன் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்!

அஜித் நடித்த ’கிரீடம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் ’மதராசப்பட்டினம்’ ’தெய்வத்திருமகள்’ ’தலைவா’ ’சைவம்’ உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கினார். இவர் அமலாபாலை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.

அதன்பின் 2019ஆம் ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டார். விஜய்-ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு 2020ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு ’துருவா’ என்று பெயர் வைத்தனர். இந்தநிலையில் நேற்று விஜய்-ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களது குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: