வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக.. ஒரே நாளில் விலை உயர்ந்த தங்கம்..

கொரோனாவால் பல குடும்பங்களின் பொருளாதார நிலை பாதிப்புக்குள்ளான நிலையில் தங்கத்தின் மீதான ஆர்வம் பொது மக்களிடையே குறைந்தது. ஆதலால் புத்தாண்டு, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் கூட தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்தித்து வந்தது .இந்நிலையில் திடீரென்று இன்று மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது தங்கம்.
இன்று ஒரே நாளில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து சவரன் ரூ.37,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,638 ஆக உயர்ந்துள்ளது.
அதேப் போல் வெள்ளி கிலோவுக்கு ரூ.3,500 அதிகரித்து ரூ.74,500க்கும், கிராம் வெள்ளி ரூ.74.50க்கும் விற்பனையாகிறது. வேதாளம் முருங்க மரம் ஏறிய கதையாக மீண்டும் தினந்தோறும் தங்கத்தின் விலை உயருமா என பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.