சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் நிலையில், ஐந்து நாள் தொழிலாளர் தின விடுமுறைக்குப் பின் பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
சீனாவின் பெய்ஜிங், ஹாங்காங், ஷாங்காய் போன்ற நகரங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாகப் பரவியதால் அதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஷாங்காய் நகரில் பல வாரங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் தொடரும் நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் பல்வேறு வகையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மே தின விடுமுறைக்காலமான ஐந்து நாட்களுக்குப் பின் இன்று பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர். இருப்பினும், வீடுகளில் இருந்து பணியாற்ற முன்னுரிமை அளிக்குமாறு அந்நாட்டு அரசு பல்வேறு நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது. இதனால் வழக்கத்தை விட பெய்ஜிங் நகரச் சாலைகளில் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh