ஆன்மீகம்

நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றும் வராஹ ஆஞ்சநேயர்!

வானர முகத்துடன் இருப்பவரே ஆஞ்சநேயர். ராமபிரானின் தூதனாக இருந்து அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றி, அவரது மனதை நிறைவடையச் செய்தவர்.

ராமபிரானின் முதன்மை பக்தனாக திகழும் அனுமனுக்கு ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு வித்தியாசமான ஆலயம் இருக்கிறது.

இங்கு 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் இருக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் வராக முகத்துடன் இருப்பது தான் அந்த ஆச்சரியமான ஒன்றாகும். குபேர திசையான வடக்கு திசை நோக்கி இருந்து அருள்பாலிக்கிறார்.

வைணவ ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக விளங்கும்  அனுமன் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகத் திகழ்வது கூடுதல் சிறப்பு.

இந்த வராக அனுமனை வணங்கினால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: