தமிழ்நாடுபொழுதுபோக்கு

காதலே.. காதலே தனி பெரும் துணையே.. ஒருவரின் தியாகத்தால் கொண்டப்படும் “காதலர்” தினம்..!

பிப்ரவரி மாதம் என்றால் நம் அனைவருக்கும் நினைவில் வருவது, காதலர் தினம் தான். ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே சாதி, மதம் மற்றும் இனம் கடந்து தூய்மையான அன்பு மலர்வது தான் காதல். இந்த தினம் எவ்வாறு உருவானது, இதனை யார் எல்லாம் கொண்டாடலாம் என்பது குறித்து பார்க்கலாம்..!!

காதலர் தினம்

காதலர் தினம் முதன் முதலாக ரோமினியர்களால் தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. காரணம், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ரோமானிய சக்கரவர்த்தி கிளாடிஸ் மிமி ஒரு நாள் திடீர் என்று இனி தனது நாட்டில் யாரும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று கட்டளையை பிறப்பித்தாராம். இதனால் அங்கு இருந்த அனைத்து காதலர்களும் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

Valentines Day DAnce e1547141379142

யாவருக்கும் தனது காதலனையோ அல்லது காதலியையோ பிரிய மனம் வரவில்லை. ஆனால், அரசனின் ஆணை என்பதால் அனைவரும் இதனை பின்பற்றி உள்ளனர். அப்போது இந்த எதிர்ப்புகளையும் மீறி தேவாலய பாதிரியரான வாலன்டைன் காதலிக்கும் இளைஞர்களுக்கு தங்கள் மனம் கவர்ந்த காதலியை ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இதனை அறிந்த அரசன் பாதிரியார் வாலண்டைனை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Fall in Love with Valentines Day Cake Pops

சிறையில் இருந்த பாதிரியாருக்கு சிறை காவல் தலைவரின் கண் தெரியாத மகள் மீது காதல் வந்துள்ளது. அஸ்டோரியஸ் என்ற அந்த கண் தெரியாத பெண்ணும் இவரை காதலித்துள்ளார். இதனை அறிந்த அஸ்டோரியஸ் தந்தை அஸ்டோரியஸை வீட்டில் அடைத்து விடுகிறார். காதலி பிரிந்த துக்கம் தாங்காமல் பாதிரியார் பல தடைகளையும் தாண்டி தனது காதலியை சந்தித்து விடுகிறார். இதனை அடுத்து இவரை தலையை வெட்டி விடுகின்றனர். இது நடந்தது பிப்ரவரி 14 ஆம் தேதி. இதனை தொடர்ந்து இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் “காதலர் தினம்” என்று அனுசரிக்கப்படுகிறது.

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!

Back to top button
error: Content is protected !!