காலிப்பணியிடங்கள்:
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Technical Assistant/ Technician – 41
- Medical Record Technician – 34
- Radiographic Technician – 01
- Senior Mechanic – 01
- Lab Attendant – 03
- Cashier – 06
கல்வித் தகுதி:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / ITI / Diploma / B.Sc / Degree போன்ற ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம் :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில், பிரிவுகளில் குறைந்தது 2 முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
வயது வரம்பு:
- Technical Assistant / Technician பணிக்கு 25 முதல் 35 வயது வரையும்,
- Lab Attendant பணிக்கு 18 முதல் 27 வரையும்,
- Medical Record Technician பணிக்கு 18 முதல் 30 வரையும்.
- Cashier பணிக்கு 21 முதல் 30 வரையும்,
- Radiographic Technician 21 முதல் 35 வரையும்,
- Senior Mechanic பணிக்கு 18 முதல் 40 வரையும் வயது வரம்பு பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
- Technical Assistant / Technician பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.33,450/- ஊதியம் வழங்கப்படும்.
- Lab Attendant பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.19,900/- ஊதியம் வழங்கப்படும்.
- Cashier / Medical Record Technician பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.23,550/- ஊதியம் வழங்கப்படும்.
- Radiographic Technician பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.33,450/- ஊதியம் வழங்கப்படும்.
- Senior Mechanic பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.23,550/- ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
- General / OBC / Ex-Servicemen ஆகிய வகுப்பு மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- மேலும் SC / ST / EWS / PH ஆகிய வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் (Written Test) மற்றும் நேர்முகத் தேர்வுகள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 21.04.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh