தமிழ்நாடு

14 இடங்களில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

ஈரோடு மாவட்டத்தில் நாளை தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல நாட்களாக திறக்கப்படாமல் உள்ள பள்ளி மற்றும் கல்லுரிகள் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பள்ளி திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ளாதோர்க்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி போடாத 30% பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் 14 இடங்களில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்படவுள்ளது. இதை தடுப்பூசி போடாத பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்கு வெளியே கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும் எனவும், ஒரு வகுப்பறையில் குறைந்த பட்சம் 20 மாணவர்களுக்கு மேல் அமர வைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், மாணவர்களை உட்கார வைக்க கூடுதல் இருக்கைகள் தேவைப்பட்டால் அமைத்து கொள்ளலாம் என்றும், மாணவர்கள் குறைவாக உள்ள வகுப்பறைக்கு இந்த கட்டுப்பாடுகள் தேவைப்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் சாதாரணமாக தனிமனித இடைவெளியுடன் மட்டும் அமர வைத்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வகுப்புகள் நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வகுப்புகள் அனைத்தும் சுழற்சி முறையில் நடத்தப்படும் என ஈரோடு கல்வித்துறை இணை இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!!
Back to top button
error: