இந்தியா

அயோத்தியில் விமான நிலையத்துக்கு ராமர் பெயர் சூட்டப்படும்.. உத்திரப்பிரதேச அரசு அறிவிப்பு..

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு ராமர் பெயர் சூட்டப்படும் என உத்திரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலும், மசூதியும் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு அதிகரிக்கப்போகும் பக்தர்கள் வரத்தை கருத்தில்கொண்டு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதை பின்னர் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபையில் 2021-22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் திரு.சுரேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்தார். அதில், அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதற்கு ‘மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Back to top button
error: Content is protected !!