ஆரோக்கியம்தமிழ்நாடு

முகத்தில் வரும் கருமையை நீக்கும் ஆரஞ்சு பழம்! இப்படி யூஸ் பண்ணுங்க..!!

வைட்டமின் சி அதிகளவில் உள்ள எல்லாப் பழங்களும் நம்முடைய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதிலும் வைட்டமின் சி ஏராளமாக இருக்கும் பழம்தான் ஆரஞ்சு.

இதில் வைட்டமின்கள், இரும்புச் சத்து, நார்ச் சத்து, மெக்னீஷியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.

இதை நாம் சாப்பிடுவதன் மூலமாக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலவிதமான பிரச்சினைகலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

ஆரஞ்சு பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அழகையும் அதிகரிக்கிறது. அந்தவகையில இதனை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

தூக்கமின்மையால் ஏற்படும் கண் சோர்வை நீக்க, ஆரஞ்சு சாற்றினை குளிர்பதப்பெட்டியில் உறைய வைத்து ஐஸ் கட்டியாக்கி அதை கண்களில் ஒத்தடம் கொடுத்தால் கண்கள் புத்துணர்வோடு பளிச்சென்று ஆகிவிடும்.

ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். இந்த பொடியுடன் முல்தானிமெட்டி, சந்தனம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸ், பன்னீர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

ஒருசிலருக்கு கன்னம், கழுத்து போன்ற பகுதிகளில் திட்டுதிட்டாக கருப்பாக இருக்கும். வேப்பங்கொழுந்து, ஆரஞ்சு தோல், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை, அரைத்து கருமை உள்ள இடங்களில் பூசி, 5 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருமை விரைவில் மறையும்.

சிலருக்கு முகத்தில் பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் இருக்கும். ஆரஞ்சு தோல் பொடி, கசகசா, சந்தனப்பொடி மூன்றும் சேர்த்து பன்னீரில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர வேண்டும். ஒரு மாதத்தில் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: