ஆரோக்கியம்தமிழ்நாடு

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்! இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

நாம் அன்றாடம் சமையலில் சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் வெந்தயம். இது ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது.

இது பல உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி சரும பிரச்சினைகளையும் சரி செய்கின்றது.

அந்தவகையில் வெந்தயத்தை எப்படி எல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவாக்க நினைத்தால் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இது சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக இருக்கும்.

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். அதற்கு வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வருவது தடுக்கப்படும்.

முதுமையைத் தள்ளிப் போட நினைப்பவர்க்ள், வெந்தயத்தை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் தெரியும் முதுமை தோற்றத்திற்கான அறிகுறிகள் அனைத்தும் தடுக்கப்படும்.

இதையும் படிங்க:  தூத்துக்குடியில் பெண்ணிடமிருந்து 17 சவரன் செயின் பறிப்பு.. ஒருவர் கைது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: