பொதுவாக அனைவருமே எதிர்கொள்ளும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு பிரச்சினை.
இதனை மருத்துவ ரீதியாக பிட்டிரியாசிஸ் காப்டிசிஸ் அல்லது செபோரிக் டேர்மடிசிஸ் என்னும் உச்சந்தலையில் உண்டாகும் ஒரு வித நோய் என்று சொல்லப்படுகின்றது.
பல முறை இந்த பொடுகைப் போக்க நாம் கண்ட கண்ட ஷாம்பூகளை வாங்கி பயன்படுத்துகிறோம். உண்மையில் இது குறிப்பிட கால அளவில் தான் போகும்.
இதற்கு நாம் இயற்கை முறையில் தேங்காய் பாலினை வைத்து பொடுகை எவ்வாறு போக்குவது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் பால் – 1-1/2 கப்
காஸ்டில் சோப் திரவ வடிவம் – 1/2 கப்
நீர் – 1/2 கப்
சுத்தீகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் – 1/2 ஸ்பூன்
ஆப்பிள் சிடர் வினிகர் – 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்
ரோஸ்மேரி – 20 துளிகள்
டீ ட்ரீ அத்தியாவசிய எண்ணெய் – 15 துளிகள்
வெந்தயத் தூள் – 1 ஸ்பூன்
BPA-அல்லாத பிளாஸ்டிக் பாட்டில்
செய்முறை
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் காஸ்டில் சோப் ஆகியவற்றை சேர்க்கவும்.
இவை அனைத்தும் நன்றாக சேர்ந்தவுடன் அதில் தண்ணீர், ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா சேர்க்கவும்.
மேலும் இந்த கலவையில் ரோஸ்மேரி மற்றும் டீ ட்ரீ எண்ணெய் சேர்க்கவும்.
கடைசியாக இதில் வெந்தயத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை ஒரு BPA அல்லாத பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh