இந்தியாவில் ஐடி துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. மேலும் புதிதாக வேலைக்கு பணியமர்த்தப்படுபவர்களுக்கு (பிரெஷ்ஷர்) சம்பளம் 60% வரை கூட உயரும் சம்பளம் 60% வரை கூட உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோய் தடுப்பு பணியாக விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற காரணத்தினால் தொழில் துறை வீழ்ச்சியை சந்தித்தது. தொற்று அச்சத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலை ஏற்பட்டதால் பெரும்பாலும் மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வாயிலாக அனைத்து வேலைகளையும் செய்ய முற்பட்டனர். இந்த நேரத்தில் ஐடி துறையின் தேவை அதிகரித்தது. எதிர்பார்த்த விதமாக பெரும் வளர்ச்சியையும் ஐடி துறை அடைந்தது. இத்தகைய நேரங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவியதால் வேலைவாய்ப்பு அதிகரித்து.
கடந்த வருடங்களில் ஐடி துறையில் வேலை வாய்ப்பு என்பது அரிதான ஒன்றாக இருந்து வந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு அதிகரித்து வருவது அத்துறை சார்ந்த மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கி வருகிறது. முன்னணி ஐடி நிறுவனங்கள் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. சம்பள விகிதம் குறைந்த பட்சம் 15% அதிகரித்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் பிரெஷ்ஷர்களுக்கு சம்பளம் 60% வரை கூட உயரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப கால பொறியாளர்களுக்கு 3.65 லட்சம் ரூபாய் சம்பளத்தில் இருந்து, 4.25 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் திறன் வாய்ந்த பணியாளர்களை பணியமர்த்த கல்லூரிகளுடன் கைகோர்த்து உள்ளதாகவும், சில கோர்ஸ்களையும் வழங்கி வருவதாகவும் முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh